இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்.. வெஸ்ட் இண்டீசுக்கு பலத்த பின்னடைவு
அவருக்கு மாற்று வீரராக ஜோஹன் லெய்ன் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.;
கயானா,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் 10-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷமர் ஜோசப் காயம் காரணமாக விலகியுள்ளார். இவரது விலகல் அந்த அணிக்கு பலத்த பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு மாற்று வீரராக ஜோஹன் லெய்ன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:
ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமல் வாரிக்கன், கெவ்லான் ஆண்டர்சன், அலிக் அதனேஸ், ஜான் கேம்பல், டேகனரைன் சந்தர்பால், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப், டெவின் இம்லாக், அல்சாரி ஜோசப், ஜோஹன் லெய்ன், பிரண்டன் கிங், ஆண்டர்சன் பிலிப், காரி பியர், ஜெய்டன் சீல்ஸ்