ஆஷஸ் முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்

இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.;

Update:2025-11-20 06:46 IST

பெர்த்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். அதற்கென தனி வரலாறும் உண்டு.

ஆஷஸ் கவுரவத்துக்காக இவ்விரு அணிகளும் உணர்வுபூர்வமாகவும், ஆக்‌ரோஷமாகவும் மல்லுக்கட்டுவதால் இந்த போட்டி மீது எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 7 தொடர் டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் பெர்த்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய நேரப்படி நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்