தற்சமயம் உலகின் சிறந்த டாப் 3 டி20 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் - சுரேஷ் ரெய்னா தேர்வு

சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த வீரர்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.;

Update:2025-08-31 15:47 IST

image courtesy:PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா. இடது கை பேட்ஸ்மேனான அவர் 3 வடிவிலான போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர். குறிப்பாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர்.

அப்படிப்பட்ட அவர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தற்சமயம் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் டாப் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்ததில் 2 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிளாசெனை அவர் தேர்வு செய்துள்ளார்.

ரெய்னா தேர்வு செய்த டாப் 3 டி20 பேட்ஸ்மேன்கள்:

1. ஹென்ரிச் கிளாசென் (தென் ஆப்பிரிக்கா).

2. அபிஷேக் சர்மா (இந்தியா).

3. சூர்யகுமார் யாதவ் (இந்தியா). 

Tags:    

மேலும் செய்திகள்