பெங்களூருக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 73 ரன்கள் அடித்தார்.;

Update:2025-04-21 09:46 IST

Image Courtesy: @IPL 

முல்லன்பூர்,

ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு 18.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, எனது காயம் லேசானது என்பதால் இந்தப் போட்டி முடிந்ததும் சரியாகி விடும். எங்களுடைய பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடச் சென்றனர். ஆனால் எங்களுக்கு கிடைத்த நல்ல துவக்கத்தை எங்களால் பயன்படுத்த முடியவில்லை. பிட்ச் நேரம் செல்ல செல்ல ஸ்லோவாக மாறியது.

மிடில் ஓவர்களிலும் நாங்கள் எதிரணி பவுலர்களை அதிரடியாக எதிர்கொள்ள முயற்சித்தும் அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. விராட் கோலி மற்றும் அவர்களுடைய வீரர்களுக்கு பாராட்டுக்கள். பிட்ச்க்கு தகுந்தார் போல் எங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பேசுகிறோம். எங்களுடைய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சிலர் முன்னே வந்து அதிரடியாக விளையாட வேண்டும்.

நான் நல்ல மனநிலைக்கான இடைவெளியில் இருக்கிறேன். 10 ரன்கள் தாண்டுவது போன்ற நல்ல துவக்கம் மட்டுமே எனக்குத் தேவை. அதே போல சுதந்திரமான துவக்கமும் எனக்கு வேண்டும். இங்கிருந்து எங்களுக்கு 6 நாட்கள் இடைவெளி இருக்கிறது. எனவே மீண்டும் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றத்தை சந்திப்பதற்கான விஷயங்களை பார்ப்பது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்