லக்னோவுக்கு எதிரான வெற்றிக்கு இதுதான் காரணம் - அக்சர் படேல் பேட்டி

லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது.;

Update:2025-04-23 11:35 IST

Image Courtesy: @IPL / @DelhiCapitals

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 52 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 161 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது முகேஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் டெல்லி கேப்டன் அக்சர் படேல் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த போட்டியின் ஆரம்பத்தில் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக தொடங்கவில்லை. அதாவது போட்டியின் ஆரம்பத்திலேயே எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. ஆனாலும், நாங்கள் கட்டுக்கோப்பான பந்துவீச்சின் மூலம் ஆட்டத்திற்குள் வந்தோம். முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் அனைத்துமே எங்களது கட்டுப்பாட்டில் வந்தது. பந்துவீச்சாளர்கள் 160 ரன்களுக்குள் எதிரணியை சுருட்டியது மிகச் சிறப்பான ஒன்று.

பந்துவீச்சில் சிறப்பான செயல்பாடு இந்த போட்டியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. கடந்த போட்டிகளின் போது எனக்கு சிறிய அளவிலான காயம் இருந்ததாலேயே நிறைய ஓவர்களை வீச முடியாமல் போனது. ஆனால், தற்போது அனைத்தும் சரியாகி விட்டதால் நான் மீண்டும் பந்துவீச வந்துள்ளேன். இந்த போட்டியில் சரியான பந்துவீச்சாளர்களை, சரியான இடத்தில் சுழற்சி முறையில் வீச வைத்தது எதிரணியை கட்டுக்குள் கொண்டு வந்ததாக நினைக்கிறேன்.

பேட்டிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். நான் எந்த இடத்தில் களமிறங்குகிறேன் என்பது எனக்கு முக்கியமில்லை ஆனால் அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே பேட்டிங் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்