டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணிக்கு 141 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருச்சி
திருச்சி தரப்பில் அதிகபட்சமாக வசீம் அகமது 36 ரன்கள் எடுத்தார்.;
Image Courtesy: @TNPremierLeague
திண்டுக்கல்,
9வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் இன்று வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து திருச்சி அணியின் தொடக்க வீரர்களாக வசீம் அகமது மற்றும் சுரேஷ் குமார் களம் இறங்கினர். இதில் வசீம் அகமது 36 ரன், சுரேஷ் குமார் 23 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய கவுசிக் 9 ரன், சஞ்சய் யாதவ் 1 ரன், ராஜ்குமார் ரன் எடுக்காமல் அவுட் ஆகினர்.
தொடர்ந்து முகிலேஷ் மற்றும் ஜாபர் ஜமால் ஜோடி சேர்ந்தனர். இதில் முகிலேஷ் 12 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. திருச்சி தரப்பில் அதிகபட்சமாக வசீம் அகமது 36 ரன்கள் எடுத்தார்.
திண்டுக்கல் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 141 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆட உள்ளது.