முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே இன்று மோதல்

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.;

Update:2025-07-14 07:03 IST

Image Courtesy: @ZimCricketv

ஹராரே,

ஜிம்பாப்வே, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்திய நேரப்படி இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சிகந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, வான்டெர் டஸன் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த ஜிம்பாப்வே 20 ஓவர் போட்டியில் பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

இவ்விரு அணிகள் இதுவரை ஆறு 20 ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 5-ல் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்