முத்தரப்பு டி20 தொடர்: இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் மோதல்

இந்த ஆட்டம் ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது.;

Update:2025-11-18 14:33 IST

ராவல்பிண்டி,

பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதில் ராவல்பிண்டியில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்