முத்தரப்பு டி20 கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு 121 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட் வீழ்த்தினார்.;

Update:2025-07-18 18:05 IST

Image Courtesy: @BLACKCAPS / @ZimCricketv

ஹராரே,

ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து ஜிம்பாப்வேயின் தொடக்க வீரர்களாக வெஸ்லி மாதவரே, பிரைன் பென்னட் களம் இறங்கினர்.

இதில் மாதவரே 36 ரன்னிலும், பிரைன் பென்னட் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து களம் இறங்கிய கிளைவ் மடாண்டே 8 ரன், சிக்கந்தர் ராச 12 ரன், ரியான் பர்ல் 12 ரன், முனியாங்கோ 13 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 121 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்