நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர், தனது நீண்ட நாள் காதலியான சுருதி ரகுநாதனை இன்று திருமணம் செய்துள்ளார்.;
image courtesy: instagram/venky_iyer
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், தனது நீண்ட நாள் காதலியான சுருதி ரகுநாதனை இன்று கரம் பிடித்தார். கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில், இன்று பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகின.