டெல்லிக்கு எதிரான வெற்றி... இவர்களுக்கு தான் பாராட்டுகள் கொடுக்க வேண்டும் - சுப்மன் கில்

டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.;

Update:2025-04-20 07:25 IST

Image Courtesy:@IPL / @DelhiCapitals / @gujarat_titans

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 39 ரன் எடுத்தார்.

குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் 19.2 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 204 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 97 ரன் எடுத்தார்.

இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது பட்லருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒரு கட்டத்தில் டெல்லி 220 - 230 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்வது போல் தெரிந்தது. அப்போது நாங்கள் மீண்டும் போட்டியை இழுத்துக் கொண்டு வந்ததற்கான பாராட்டுகள் எங்களுடைய பவுலர்களை சேரும்.

முதல் போட்டியிலும் கிட்டத்தட்ட 245 ரன்களை துரத்திய நாங்கள் 10 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றோம். அந்த வகையில் நன்றாக சேசிங் செய்யும் நாங்கள் பாதுகாப்பாக விளையாடுகிறோம். அவர்கள் முன்னோக்கி சென்ற போது அக்சர் பட்டேல் பேட்டிங் செய்த சமயத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை அடிப்பது கடினமாக இருந்தது.

எனவே, அதை மாற்றாமல் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்று நினைத்தோம். பேட்டிங்கில் நான் ரன் அவுட்டானாலும் இன்னும் நிறைய போட்டிகள் இருப்பதால் எனக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பட்லர் - ரூதர்போர்ட் ஸ்ட்ரைக்கை மாற்றி மாற்றி, அடித்து ஆடிய விதம் அற்புதமாக இருந்தது. அது குருட்டுத்தனமான ஹிட்டிங் கிடையாது. சூழ்நிலையை கணக்கிட்டு அவர்கள் மிகவும் நேர்த்தியாக பேட்டிங் செய்ததைப் பார்த்தது விருந்தாக அமைந்தது. இந்த வெற்றியால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்