விஜய் ஹசாரே கோப்பை : காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் விவரம்
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.;
ஆமதாபாத்,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் இடம் பெற்ற 23 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
கர்நாடகம், மத்தியபிரதேசம் (ஏ பிரிவு), உத்தரபிரதேசம், விதர்பா (பி), பஞ்சாப், மும்பை (சி), டெல்லி, சவுராஷ்டிரா (டி) ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதி சுற்று பெங்களூருவில் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு அணி 2 வெற்றி பெற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.