ஆஷஸ் தொடர்: 40 ஆண்டுகளுக்கு பிறகு..ஸ்டார்க் செய்த சாதனை

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.;

Update:2026-01-09 14:27 IST

சிட்னி,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. அத்துடன் அந்த அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக விளையாடினார்.இந்த தொடரில் 31 விக்கெட் மற்றும் 2 அரைசதம் உள்பட 156 ரன்களும் எடுத்தார். ஆஷஸ் தொடரில் 30-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு அரைசதமும் ஒரு வீரர் அடிப்பது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1985-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் இயான் போத்தம் இத்தகைய சாதனையை படைத்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்