பார்டர் கவாஸ்கர் சாதனையை முறியடித்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.;

Update:2026-01-08 19:01 IST

சிட்னி,

ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. அத்துடன் அந்த அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை காண மொத்தமாக 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 879 பேர் வருகை தந்துள்ள நிலையில் அந்த வருகை சாதனையை இந்த ஆண்டு ஆஷஸ் தொடர் முறியடித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்