நியூசிலாந்து தொடர்: தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்;
புதுடெல்லி,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டிகள் வதோதரா (ஜன.11), ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்த நிலையில், இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.