மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் இன்று தொடங்குகிறது

மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.;

Update:2026-01-09 14:03 IST

நவிமும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் இன்று தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பிப்ரவரி 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில், முதல் 11 லீக் ஆட்டங்கள் நவிமும்பையிலும், இதைத்தொடர்ந்து அடுத்த 9 லீக் ஆட்டங்கள், வெளியேற்றுதல் சுற்று, இறுதிப்போட்டி ஆகியவை குஜராத் மாநிலம் வதோதராவிலும் அரங்கேறுகிறது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்