6வது வெற்றியை பதிவு செய்வது யார்..?: டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.;
Image Courtesy: @IPL / @DelhiCapitals / @LucknowIPL
லக்னோ,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸை எதிர்கொள்கிறது.
இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் டெல்லி அணி 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் லக்னோ அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் தங்களது 6வது வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.