ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்...? - ஜெய்ஸ்வால் பதில்

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை.;

Update:2025-09-21 04:30 IST

image courtesy:PTI

புதுடெல்லி,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை. அணியில் இடம் பெறாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜெய்ஸ்வால் அளித்த பதிலில் கூறியதாவது,

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை. ஏனெனில் அது தேர்வு குழுவினரின் கைகளில் தான் உள்ளது. அணியின் கலவையை கருத்தில் கொண்டே முடிவு எடுத்திருப்பார்கள். அணியில் இடம் பிடிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். எனக்கான நேரம் வரும் போது எல்லா விஷயங்களும் சரியாக நடக்கும்.

அதுவரை நான் கடினமாக உழைத்து என்னை மேம்படுத்தி கொண்டே இருப்பேன். வரும் காலங்களில் இந்திய அணிக்காக மிகப்பெரிய அளவில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவரை முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து கடினமாக உழைப்பேன்.

இந்திய அணிக்காக ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்காகும். 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்