பெங்களூரு அணியின் 17 ஆண்டு கால மோசமான வரலாற்றை மாற்றுவாரா புதிய கேப்டன் படிதார்..?

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.;

Update:2025-03-28 13:55 IST

image courtesy:twitter/@IPL

சென்னை,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னைக்கு எதிராக கடந்த 2008-ம் ஆண்டு மட்டுமே வெற்றி கண்டுள்ளது. அதன் பிறகு கடந்த 17 ஆண்டுகளில் ஒரு முறை கூட சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததில்லை.

இந்த மோசமான வரலாற்றை பெங்களூரு அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார் மாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்