மகளிர் பிரீமியர் லீக்: உபி வாரியர்ஸ் அணிக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்

குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.;

Update:2026-01-22 21:40 IST

வதோதரா,

5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. இந்த நிலையில் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் 14வது ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் - குஜராத் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது, அதில் டாஸ் வென்ற உபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி சோபி டேவின் 50 ரன்களும், பெத் மூனி 38 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 154 ரன்கள் இலக்குடன் உபி வாரியர்ஸ் விளையாடி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்