முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.;

Update:2026-01-22 22:50 IST

கொழும்பு,

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 93 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆனால், இலங்கை அணியின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அணியின் பென் டக்கெட் 62 ரன்களும், ஜோ ரூட் 61 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் இங்கிலாந்தை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது. இலங்கை தரபில் பிரமோத் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்