மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை எவ்வளவு? - வெளியான தகவல்
மகளிர் உலகக்கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது;
மும்பை,
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று நவிமும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா , மகளிர் உலகக்கோப்பை வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, உலகக்கோப்பையை வென்ற இந்தியாவுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) பரிசுத்தொகையாக ரூ. 40 கோடி வழங்கியுள்ளது. அதேவேளை, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து 2ம் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்காவிற்கு ரூ. 20 கோடி வழங்கப்பட்டது.
அதேபோல், அரையிறுதிச்சுற்றில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்திற்கு தலா ரூ. 9.30 கோடி வழங்கப்பட்டது. அதேபோல், புள்ளிப்பட்டியலில் 5வது, 6வது இடம் பிடித்த இலங்கை, நியூசிலாந்திற்கு தலா ரூ. 5.80 கோடி வழங்கப்பட்டது. 7வது இடம் பிடித்த வங்காளதேசத்திற்கு ரூ. 2.30 கோடி வழங்கப்பட்டது. அதேவேளை தொடரில் பங்கேற்ற ஒவ்வொரு அணிக்கு தலா ரூ. 2 கோடி தொடருக்கான ஊதியமாக வழங்கப்பட்டது.