இளையோர் கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்க வீரர் இரட்டை சதம் அடித்து சாதனை

இளையோர் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஜோரிச் வான் படைத்தார்.;

Update:2025-07-26 09:45 IST

Image Courtesy: @ZimCricketv

ஹராரே,

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்காளதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ள இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேயில் நேற்று தொடங்கியது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 49.5 ஓவர்களில் 385 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தொடக்க வீரர் ஜோரிச் வான் சால்க்விக் 215 ரன்கள் (153 பந்து, 19 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். இதன் மூலம் இளையோர் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஜோரிச் வான் படைத்தார்.

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 24.3 ஓவர்களில் 107 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 278 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்