கேரளா வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி
நட்புறவு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது;
புதுடெல்லி,
கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கடந்த (2022-ம் ஆண்டு) உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகின் சிறந்த வீரர் விருதை 8 முறை கைப்பற்றி சாதித்துள்ள 38 வயது முன்கள வீரரான மெஸ்சி ஒரு ஆண்டில் அதிக கோல்கள் (91), ஒரு கிளப் அணிக்காக அதிக கோல்கள் (பார்சிலோனா கிளப் அணிக்காக 672 கோல்) அடித்தது உள்பட பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார். தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் மெஸ்சிக்கு இந்தியாவிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக கேரளாவில் அவருக்கு அதிக ஆதரவு உள்ளது.
இந்த நிலையில் , வரும் நவம்பரில் லியோனல் மெஸ்ஸி கேரளா வர உளளார். இதனைஅர்ஜென்டினா கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது. வரும் அக்டோபர் , நவம்பரில் பல்வேறு நட்புறவு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது இதில் கேரளாவில் ஒரு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மெஸ்ஸி பங்கேற்று விளையாடுகிறார் . மெஸ்ஸி வரவுள்ளதால் கேரளா கால்பந்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் .