ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; முகமதின் அணியை பந்தாடிய மோகன் பகான்
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.;
Image Courtesy: @IndSuperLeague / @mohunbagansg
புதுடெல்லி ,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் முகமதின் - மோகன் பகான் அணிகள் ஆடின.
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மோகன் பகான் அணி 3 கோல்களை அடித்து அசத்தியது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்து அசத்தியது.
மறுபுறம் முகமதின் அணியினர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் ஆட்ட நேர முடிவில் மோகன் பகான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முகமதின் அணியை பந்தாடியது.