சூப்பர் கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்ற பி.எஸ்.ஜி.
இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி. - டோட்டன்ஹாம் அணிகள் மோதின.;
image courtesy:twitter/@PSG_English
உடினே,
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் 50-வது சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) - டோட்டன்ஹாம் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. பி.எஸ்.ஜி தரப்பில் லீ காங் மற்றும் ராமோஸ் தலா ஒரு கோல் அடித்தனர். மறுபுறம் டோட்டன்ஹாம் தரப்பில் மிக்கி வான் டி வான் மற்றும் கிறிஸ்டியன் ரோமேரோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதனையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் பி.எஸ்.ஜி. அணி 4-3 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாமை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.