ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி: ஸ்பெயின் அணியிடம் இந்தியா தோல்வி

9-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை சந்தித்தது.;

Update:2025-12-13 07:21 IST

கோப்புப்படம் 

சான்டியாகோ,

11-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி சிலி தலைநகர் சான்டியாகோவில் நடந்து வருகிறது. இதில் 9-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் பணிந்து 10-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. ஸ்பெயின் அணியில் நாதலியா விலானோவா (16-வது நிமிடம்), எஸ்தர் கனாலிஸ் (36-வது நிமிடம்) கோலடித்தனர். இந்திய அணியில் கனிகா சிவாச் (41-வது நிமிடம்) கோல் அடித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்