லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: ஆக்கி தகுதி சுற்று முறைக்கு ஒலிம்பிக் கமிட்டி அனுமதி
போட்டியை நடத்தும் நாட்டை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும்.;
லாஸ் ஏஞ்சல்ஸ்,
34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கான ஆக்கி தகுதி சுற்று முறைக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளித்துள்ளது.
அதன்படி இதில் பங்கேற்கும் 12 அணிகளில் போட்டியை நடத்தும் நாட்டை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். 2025-26 மற்றும் 2026-27-ம் ஆண்டுக்கான புரோ ஆக்கி லீக்கில் முதலிடம் பிடிக்கும் அணிகள், கண்டங்களுக்கான ஒவ்வொரு சாம்பியன்ஷிப்பிலும் (மொத்தம் 5 அணி) பட்டம் வெல்லும் அணிகள் மற்றும் சில தகுதி சுற்று தொடர்கள் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு அணிகள் தேர்வாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.