ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்.. சாதிக்குமா இந்தியா..?

இந்த தொடரில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை.;

Update:2025-05-27 03:55 IST

குமி,

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் இன்று தொடங்கி 31-ந் தேதி வரை நடக்கிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்த தொடரில் இந்திய அணி சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் போட்டியில் கவனம் செலுத்தி வருவதால் இடம் பெறவில்லை.

மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 9 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் 6 தங்கம், 12 வெள்ளி உள்பட 27 பதக்கங்கள் வென்று 3-வது இடம் பிடித்த இந்தியா இம்முறை முதலிடத்தை பிடித்து சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்