ஆசிய கைப்பந்து: இந்திய அணிக்கு வெண்கலப்பதக்கம்
இந்திய அணி 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நேற்று ஜப்பானை சந்தித்தது;
நகோன் பதோம்,
16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 2-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் உள்ள நகோன் பாதோம் நகரில் நடந்தது.
16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்றில் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சீனாவை வீழ்த்தி தனது பிரிவில் (ஏ) முதலிடம் பிடித்த இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதால் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நேற்று ஜப்பானை சந்தித்தது. இதில் இந்திய அணி 25-21, 12-25, 25-23, 18-25, 15-10 என்ற செட் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றது.
இதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி சரிவில் இருந்து மீண்டு வந்து 22-25, 21-25, 30-28, 25-21, 15-10 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான ஈரானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.