காமன்வெல்த் செஸ் போட்டி: சென்னை மாணவி அஸ்வினிகா வெண்கலப்பதக்கம் வென்றார்
16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை அஸ்வினிகா வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.;
காமன்வெல்த் செஸ் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை அஸ்வினிகா வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் 9-வது மற்றும் கடைசி சுற்றில் 51-வது காய் நகர்த்தலுக்கு பிறகு முசோபோரோ லோனேவை (போஸ்ட்வானா) தோற்கடித்து 7 புள்ளியுடன் வெண்கலம் பெற்றார்.
சென்னை கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமாரின் மகளான அஸ்வினிகா நுங்கம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.