ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தென்கொரியாவின் சிம் யு ஜின்னை இன்று சந்தித்தார்.;
Image : PTI
டோக்கியோ,
மொத்தம் ரூ.8¼ கோடி பரிசுத்தொகைக்கான ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தென்கொரியாவின் சிம் யு ஜின்னை இன்று சந்தித்தார்.
இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பி.வி.சிந்து 15-21, 14-21 என்ற செட் கணக்கில் சிம் யு ஜின்னிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.