புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- ஜெயப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதின.;

Update:2025-10-11 21:32 IST

புதுடெல்லி,

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்ததொடரில் சென்னையில் நடந்து வந்த லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், அடுத்த கட்ட ஆட்டங்கள் டெல்லியில் இன்று தொடங்கியது .

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில்   பெங்களூரு புல்ஸ்- ஜெயப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு புல்ஸ் அணி  47-26என்ற கணக்கில் வெற்றி பெற்றது 

Tags:    

மேலும் செய்திகள்