புரோ கபடி லீக்: பாட்னா வெற்றி.. ஜெய்ப்பூர் வெளியேற்றம்

இன்று நடைபெறும் 2-வது வெளியேற்றுதல் சுற்றில் பாட்னா பைரட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.;

Update:2025-10-27 09:45 IST

புதுடெல்லி,

12-வது புரோ கபடி லீக் தொடரில், பிளே-ஆப் சுற்று டெல்லியில் நடந்து வருகிறது. இதில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் பாட்னா 48-32 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வெளியேற்றியது.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-32 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. தோல்வியை தழுவினாலும் பெங்களூரு அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.

இன்று நடைபெறும் 2-வது வெளியேற்றுதல் சுற்றில் பாட்னா பைரட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகளும் (இரவு 8 மணி), இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புனேரி பால்டன்- தபாங் டெல்லி (இரவு 9 மணி) அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்