வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்

மாநில அளவிலானப் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-10-11 15:53 IST

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-இன் மாநில அளவிலானப் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனையருக்கு வழங்கப்படும் உணவு வகைகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். உணவின் தரம் குறித்து வீரர்களிடம் கேட்டறிந்து, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தோம்.

களம்_நமதே என்று பதக்கங்களைக் குவித்து, தேசிய - சர்வதேச அளவிலும் சாதிக்க நம் வீரர் - வீராங்கனையரை வாழ்த்தினோம். என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்