உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

பி.வி சிந்து 3-வது சுற்றில் சீன வீராங்கனை உடன் மோதினார்.;

Update:2025-08-29 06:32 IST

imahe courtesy:PTI

பாரீஸ்,

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையரில் நேற்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஷி யியுடன் மல்லுக்கட்டினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வாங் ஷியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

சிந்து காலிறுதியில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியை சந்திக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்