உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; தங்க பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி

உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஷீத்தல் தேவிக்கு 3-வது பதக்கம் இதுவாகும்.;

Update:2025-09-27 22:04 IST

குவாங்ஜு,

உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி (வயது 18) பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இந்த போட்டியில், உலக தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள துருக்கியின் ஓஜ்னுர் கியூர் கிர்தியை 146-143 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி ஷீத்தல் வெற்றி பெற்றுள்ளார்.

சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவருக்கு 3-வது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு, தோமன் குமாருடன் இணைந்து ஷீத்தல், கலப்பு குழு பிரிவில் வெண்கல பதக்கமும், காம்பவுண்டு பெண்கள் ஓபன் குழு பிரிவில் ஷீத்தல் மற்றும் சரிதா வெள்ளி பதக்கமும் வென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்