உலக ஸ்பீட் ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற தமிழக வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.;
புதுடெல்லி,
உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் சீனாவில் நடந்து வருகிறது. இதில் 1,000 மீ ஸ்பிரிண்ட்-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் (22) தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஆனந்த்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
‘ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ஆனந்த்குமாரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது மனஉறுதி, வேகம், உற்சாகம் அவரை ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் முதல் உலக சாம்பியனாக்கி இருக்கிறது. அவரது சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்’ என கூறியுள்ளார்.