பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: சபலென்கா சாம்பியன்
அரினா சபலென்கா (பெலாரஸ்) , உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூகை எதிர்கொண்டார்.;
பிரிஸ்பேன்,
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) , உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூகை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.