கனடா ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நவோமி ஒசாகா அரையிறுதியில் கிளாரா டாசன் உடன் மோதினார்.;

Update:2025-08-07 19:08 IST

image courtesy:twitter/@OBNmontreal

டொராண்டோ,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நவோமி ஒசாகா (ஜப்பான்) - கிளாரா டாசன் (டென்மார்க்) மோதினர்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட ஒசாகா 6-2 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் முன்னணி வீராங்கனையான ரைபகினவை (கஜகஸ்தான்) வீழ்த்தி விக்டோரியா எம்போகோ (கனடா) இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் விக்டோரியா எம்போகோ - நவோமி ஒசாகா பலப்பரீட்சை நடத்த உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்