பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷியா), ஸ்பெயினின் கிறிஸ்டினா புச்சா உடன் மோதினார்.;
கோப்புப்படம்
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷியா), ஸ்பெயினின் கிறிஸ்டினா புச்சா உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிர்ரா ஆண்ட்ரீவா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கிறிஸ்டினா புச்சாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.