பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ரூப்லெவ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷியா), தென் ஆப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸ் உடன் மோதினார்.;

Update:2025-05-28 07:34 IST

கோப்புப்படம்

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷியா), தென் ஆப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட ரூப்லெவ் 6-4, 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் லாயிட் ஹாரிஸை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்