அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா சாம்பியன்
அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா, பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் மோதினர்.;
நியூயார்க்,
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா, பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி சபலென்கா ஆதிக்கம் செலுத்தினார். இதனால் சபலென்கா 6-3, 7(7) - 6(3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.