'பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி சேர்வது புதிதல்ல' - அன்புமணி ராமதாஸ்


பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி சேர்வது புதிதல்ல - அன்புமணி ராமதாஸ்
x

வாஜ்பாய் தலைமையில் 6 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகித்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி சேர்வது புதிதல்ல என்றும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் தி.மு.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்ததாகவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்வது புதிதல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 6 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகித்தது. அந்த சமயத்தில் 5 ஆண்டுகள் தி.மு.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது.

எனவே பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தி.மு.க.வுக்கும் புதிதானது அல்ல. தொடர்ந்து 2014, 2019, 2021-ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துதான் பா.ம.க. தேர்தலில் போட்டியிட்டது. இந்நிலையில் இந்த முறை நாங்கள் பா.ஜ.க.வுடன் சேர்ந்து போட்டியிடுவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆச்சரியமாக பார்ப்பது ஏன் என்று தெரியவில்லை."

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.




Next Story