டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட் கேட்டு புதிய ஹேஷ்டேக் டிரெண்ட்


டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட் கேட்டு புதிய ஹேஷ்டேக் டிரெண்ட்
x
தினத்தந்தி 1 Oct 2021 6:28 PM IST (Updated: 1 Oct 2021 6:28 PM IST)
t-max-icont-min-icon

பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட் கேட்டு டுவிட்டரில் "அப்டேட் கொடுங்க நெல்சன்" என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

சென்னை

விஜய்யின் நடிக்கும் 65-வது படம் பீஸ்ட். இந்த  படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தற்போது இறுதிக்கட்ட கட்ட  பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே ஜார்ஜியாவில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்தனர். பின்னர் சென்னை திரும்பி தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு டப்பிங், இசை கோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க உள்ளனர்.

பொங்கலுக்கு பீஸ்ட் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட் கேட்டு டுவிட்டரில் "அப்டேட் கொடுங்க நெல்சன்" என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story