வைரலாகும் பீஸ்ட் நடிகையின் உடற்பயிற்சி வீடியோ


வைரலாகும் பீஸ்ட் நடிகையின் உடற்பயிற்சி வீடியோ
x
தினத்தந்தி 9 Jan 2022 5:59 PM GMT (Updated: 9 Jan 2022 5:59 PM GMT)

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார்.

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.Next Story