நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று


நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 17 Jan 2022 5:08 PM GMT (Updated: 2022-01-17T22:38:08+05:30)

மலையாளம், தமிழ் போன்ற பல மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் தமிழ், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்துவந்த சி.பி.ஐ 5 என்ற திரைப்படத்தில் நடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Next Story