கமலா மில் தீ விபத்து சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் ஜெயின் அமைப்பினர் வலியுறுத்தல்


கமலா மில் தீ விபத்து சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் ஜெயின் அமைப்பினர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Jan 2018 4:45 AM IST (Updated: 1 Jan 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

கமலா மில் தீ விபத்து சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயின் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

மும்பை,

மும்பை பரேல் பகுதியில் உள்ள கமலா மில் வளாகத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 மாநகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மும்பை முழுவதும் ஓட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் விதிமுறை மீறி செயல்பட்டு வரும் வணிக கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கமலா மில் தீ விபத்து சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஜெயின் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய அந்த அமைப்பினர் கூறியதாவது:–

மாநகராட்சியின் ஊழல் நிர்வாகத்தால் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினால் தவறு செய்த அதிகாரிகள் தப்பித்து விடுவார்கள். எனவே இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story