தேசிய செய்திகள்

மும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு அறிவிப்பு + "||" + Mumbai IIT Rs. 1,000 crore subsidy for 6 higher education institutions including - Central Government Announcement

மும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு அறிவிப்பு

மும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு அறிவிப்பு
மும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் மத்திய அரசு வழங்குகிறது.
புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள பிரபலமான உயர்கல்வி நிறுவனங்களான டெல்லி ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி., பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்சி மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களான மணிப்பால் உயர்கல்வி அகாடமி, ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப விஞ்ஞான கழகம் (பிட்ஸ் பிலானி), ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மானியமாக ரூ.1,000 கோடி வழங்குகிறது. கல்வியின் தரத்தை அதிகரித்து இந்த உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக மேம்படுத்தும் வகையில் இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.


இந்தியாவில் உள்ள 800 பல்கலைக்கழங்களில் ஒரு பல்கலைக்கழகம் கூட உலக அளவிலான தகுதி பட்டியலில் முதல் 100 இடங்களிலோ அல்லது முதல் 200 இடங்களிலோ இடம்பெறவில்லை என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


ஆசிரியரின் தேர்வுகள்...