டெல்லியில் ராகுல்காந்தியுடன் திருச்சி சிவா சந்திப்பு


டெல்லியில் ராகுல்காந்தியுடன் திருச்சி சிவா சந்திப்பு
x
தினத்தந்தி 9 July 2018 11:15 PM GMT (Updated: 9 July 2018 9:50 PM GMT)

டெல்லியில் ராகுல்காந்தியை திருச்சி சிவா சந்தித்தார்.

புதுடெல்லி,

தி.மு.க. சார்பில் மாநில சுயாட்சி பாதுகாப்பு மாநாடு சென்னையில் வருகிற ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த கடிதத்தை திருச்சி சிவா எம்.பி. தலைவர்களுக்கு நேரில் வழங்கி வருகிறார். நேற்று மாலை அவர் ராகுல்காந்தியை சந்தித்து கடிதத்தை வழங்கினார்.

முன்னதாக அவர் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை சந்தித்து மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.

Next Story